சட்டவிரோத மென்பொருள் மூலம் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி!

சட்டவிரோத மென்பொருள் மூலம் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி!

சட்டவிரோத மென்பொருள் மூலம் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி!
Published on

ரயில்களில் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய, இனி கூடுதல் டிக்கெட்டுகள் கிடைக்கும் என ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகளின் அவசர பயணத்திற்கு கைகொடுப்பது தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு. திடீர் பயணத்திற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவ்வப்போது இந்த முறையிலும் டிக்கெட் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தட்கல் முறை முன்பதிவில் சில மோசடிகள் நடப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி தட்கல் முன்பதிவு நடைமுறையில், சிலர் பயன்படுத்திய சட்டவிரோத மென்பொருட்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் விநியோகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அருண் குமார் தெரிவித்தார். ANMS, MAC, Jaguar போன்ற சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் சில முகவர்கள் டிக்கெட் முன்பதிவுகள் மேற்கொண்டிருந்ததாக அருண் குமார் குறிப்பிட்டார்.

சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி தட்கல் டிக்கெட் பெற்று அதனை விற்று வந்ததன் மூலம் ஆண்டுக்கு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை முறைகேடாக வர்த்தகம் நடைபெற்று வந்ததாகவும் இந்த தவறை செய்த 60 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் தெரிவித்தார். இந்த தவறுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் முறைகேடு நடக்காது என்றும் அருண் குமார் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com