கேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு

கேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு
கேபிள் டி.வி. கட்டண விவகாரம்: சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு
Published on

கேபிள் டிவி கட்டண விகித மாற்றத்தால், ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்கள் வரும் 29-ம் தேதிக்கு பின்னரும் கட்டண சேனல்களை தொடர்ந்து பார்க்கலாம் என டிராய் விளக்கம் அளித்துள்ளது.

விரும்பிய சேனல்களை பொதுமக்களே தேர்வு செய்து பார்க்கும் வகையில் கேபிள் டிவி கட்டண விகிதத்தில் டிராய் மாற்றம் செய்துள்ளது. இதன்படி, கேபிள் டிவிக்கு அடிப்படை கட்டணம் 155 ரூபாய் எனவும், விருப்பதாக தேர்வு செய்யப்படும் கட்டண சேனல்களுக்கு என தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

டிராயின் இந்த புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இப்புதிய முறையால் மாதந்தோறும் 500 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே கேபிள் டிவி கட்டண விகித மாற்றத்தை டிராய் நெறிமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். 

இந்நிலையில், டிராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேபிள் டிவி புதிய கட்டண விகித நடைமுறைக்கு வரும் 28-ம் தேதிக்குள் இணையுமாறு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிய நடைமுறையால் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள், அவர்கள் பார்த்துவரும் கட்டண சேனல்களை டிசம்பர் 29-ம் தேதிக்குப் பின்னரும் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 29-ம் தேதிக்குப்பின் கட்டண சேனல்கள் எடுக்காது என தகவல் பரவி வரும் நிலையில், இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com