டெல்லியில் ஊரடங்கு தளர்வால் கடும் வாகன நெரிசல்

டெல்லியில் ஊரடங்கு தளர்வால் கடும் வாகன நெரிசல்
டெல்லியில் ஊரடங்கு தளர்வால் கடும் வாகன நெரிசல்
Published on

தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து டெல்லியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

டெல்லியில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததையடுத்து 50 சதவிகித பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தலைநகரில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. தினமும் 400 முதல் 500 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இதனை அடுத்து டெல்லி அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்துள்ளன. இதன்படி மெட்ரோ ரயில்கள் 50 சதவிகித பயணிகளுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடைவீதிகள், மால்கள் ஆகியவை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் திறக்கப்பட்டன. தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com