குண்டும் குழியுமான சாலைகள்: சுற்றுலாப் பயணிகளால் புறக்கணிக்கப்படும் தேக்கடி

குண்டும் குழியுமான சாலைகள்: சுற்றுலாப் பயணிகளால் புறக்கணிக்கப்படும் தேக்கடி
குண்டும் குழியுமான சாலைகள்: சுற்றுலாப் பயணிகளால் புறக்கணிக்கப்படும் தேக்கடி
Published on

கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடிக்குக் குமுளியிலிருந்துச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதால், சுற்றுலா தொழில் பாதிப்பதாகக் கூறி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில் செய்யும் கூட்டமைப்பினர் பழுதான சாலையை சீராக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமாக இடுக்கி மாவட்டத்தின் தேக்கடி அமைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் தேக்கடிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் இரண்டு கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இதனால் சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதால், சுற்றுலா தொடர்பான தொழில்கள் பாதிக்கப்பட்டு, தங்கள் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்படைவதாக சுற்றுலா தொடர்பான தொழில் செய்வோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இதையடுத்து நெடு நாட்களாக சாலையை சீராக்காத பொதுப்பணித்துறையினரை கண்டித்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில் செய்யும் ஆட்டோ, ஜீப், கார் ஓட்டுனர் நங்கம், தங்கும் விடுதி, உணவு விடுதி கூட்டமைப்பினர் சர்பில் தேக்கடியில் கண்டன ஊர்வலம் நடந்தது. பின் குமுளியில் உள்ள கேரள பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நடந்த முற்றுகை போராட்டத்தில், தேக்கடியை நம்பி வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தருவதோடு, சுற்றுலா தொடர்பான தொழிலை பாதுகாக்கும் நோக்கில் பழுதான சாலையை சீராக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com