டாப் செய்திகள்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதல் ஐபிஎல் வரை

டாப் செய்திகள்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதல் ஐபிஎல் வரை
டாப் செய்திகள்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு முதல் ஐபிஎல் வரை
Published on

இன்றைய டாப் செய்திகளில் சில... 

  • தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டியது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
  • தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். மேலும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
  • அவசரகால தேவைக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
  • கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என சர்வதேச சுகாதார அமைப்பு கணித்துள்ளது. உலகளவில் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கையும் ஒரே வாரத்தில் 5% அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • தமிழகத்தில் திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 3-ல் நடைபெறவிருந்த மொழிப்பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
  • கோவையில் ஹோட்டலில் சாப்பிட்டவர்கள்மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் ஆணையர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • திருவாரூர், மயிலாடுதுறையில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருக்கிறது. திறந்த வெளியில் கிடப்பதால் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் அச்சத்ததில் உள்ளனர்.
  • புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து இன்று பொறுப்பேற்கிறார்.
  • சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் நடத்துவதாக மம்தா அறிவித்துள்ளார்.
  • ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் வீணானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com