விவசாயிகள் வெளியேறாவிட்டால் அகப்பற்படுவர் என உத்தரப் பிரேதச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காசிப்பூர் எல்லையில் காவல்துறை குவிக்கப்பட்டதால் விடியவிடிய பதற்றம் நீடித்துவருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. அதில் இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ என்று புதிய வியூகத்தில் இன்று முதல் பரப்புரையை தொடங்குவதாக தெரிவித்திருக்கிறார் முக ஸ்டாலின். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நேரில் மரியாதை செலுத்திய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை மீது தீயிட்ட டயரை வீசிக் கொன்ற விவகாரத்தில் 55 சொகுசு விடுதிகள் காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளது.
புத்துணர்வு முகாமுக்கு வரும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதாக மாணவர்கள் போராடி வரும் நிலையில், நடவடிக்கையாக உயர்கல்வித் துறையின் கீழ் இருந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறையின்கீழ் மாற்றப்பட்டுள்ளது.
தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் வண்ணமயமாக நடைபெற்ற தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.