மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் முதல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது வரையிலான டாப் 10 செய்தித் துளிகள் இங்கே...
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய பொருட்களை எரிப்பதால் புகைமூட்டம் நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியுற்றுள்ளனர்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் வந்த 5.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மண்டலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக வரும் 18 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்.
கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடுதல் என்ற பெயரிலான பாரம்பரிய விழாவை நடத்தலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. பாஜக தேசியத் தலைவர் நட்டாவும், அதேநாளில் தமிழகம் வருவதால் களைகட்டும் சட்டப்பேரவைத் தேர்தல் களம்.
பொங்கலையொட்டி 3 நாட்களில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கூட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சுற்றுலாதளங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பெற்றோரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மின்கம்பி மீது பேருந்து உரசி விபத்து ஏற்பட்டதில், மகள்களுக்கு பொங்கல் சீர்வரிசை எடுத்துச் சென்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்.