நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில்தான் இந்தியாவின் கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இடம்பிடித்துள்ளார்.
மொத்தம் 4,033 எம்எல்ஏக்களில் 4,001 எம்எல்ஏக்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின் பணக்கார எம்எல்ஏக்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கர்நாடக எம்எல்ஏக்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் என அது தெரிவித்துள்ளது.
1. டி.கே.சிவகுமார், கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,413 கோடி
2. கே.எச்.புட்டஸ்வாமி கவுடா, கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,267 கோடி
3. பிரியாகிருஷ்ணா, கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,156 கோடி
4. என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திரா. மொத்த சொத்தின் மதிப்பு மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.668 கோடி
5. ஜெயந்திபாய் சோமாபாய் படேல், குஜராத் மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.661 கோடி
6. சுரேஷா பி.எஸ்., கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.648 கோடி
7. ஒய்.எஸ்.ஜெகன் மோகன், ஆந்திரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.510 கோடி
8. பராக் ஷா, மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.500 கோடி
9. டி.எஸ். பாபா, சத்தீஸ்கர். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.500 கோடி
10. மங்கள்பிரபாத் லோதா, மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.441 கோடி
1. நிர்மல் குமார் தாரா, மேற்கு வங்காளம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,700
2. மகரந்தா முதுலி, ஒடிசா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.15,000
3. நரிந்தர் பால் சிங் சவ்னா, பஞ்சாப். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.18,370
4. நரிந்தர் கவுர் பராஜ், பஞ்சாப். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.24,409
5. மங்கள் கலிந்தி, ஜார்கண்ட். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,000
6. பண்டரிகாக்ஷய சாஹா, மேற்கு வங்காளம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,423
7. ராம் குமார் யாதவ், சத்தீஸ்கர். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,464
8. அனில் குமார் அனில் பிரதான், உத்தரப் பிரதேசம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,496
9. ராம் டாங்கோர், மத்தியப் பிரதேசம் மொத்த சொத்தின் மதிப்பு: ₹50,749
10. வினோத் பிவா நிகோல், மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ₹51,082