‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ - உச்சநீதிமன்றம் சூசகம் 

‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ - உச்சநீதிமன்றம் சூசகம் 
‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ - உச்சநீதிமன்றம் சூசகம் 
Published on

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆண்டுக்கு ‌8 லட்சம் ரூபாய்க்கு ‌கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்‌கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களை மட்டுமே பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக கருதப்படுவர். இது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே 10 சதவீத இடஒதுக்கீட்டு பலனை பெற முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்தச் சட்டத் திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன் அமர்விற்கு மாற்றுவது தொடர்பாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில் வழக்கு விசாரணை குறித்து செய்து வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதி பாப்டே,“அதிகப்படியான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் வழங்கப்படும் சமமான வாய்ப்பை பறிக்கும் விதமாக அமைந்துவிடும். ஏனென்றால் இடஒதுக்கீடு என்பது அனைவருக்கு சமமான வாய்ப்பு வழங்க கொண்டுவரப்பட்டது.எனவே சமுதாயத்தில் நல்ல இடத்தில் உள்ள வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அது சமத்துவத்தை மீறுவது போல உள்ளது” எனத் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேனுகோபால், “பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் ஜாதி இல்லாத சமூகத்தை அடைவதற்கான முயற்சி” எனக் கூறியுள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில், “10% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றபட வேண்டும். ஏனென்றால், இந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த 50% இடஒத்துகீடு விதியை மீறும் வகையில் உள்ளது. அத்துடன் உச்சநீதிமன்றம் இந்திரா சாஹானி வழக்கில் இடஒதுக்கீடு பொருளாதாரத்தை வைத்து மட்டும் இருக்கக்கூடாது என்று கூறிய தீர்ப்பையும் மீறும் வகையில் இது உள்ளது” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com