மகாராஷ்டிரா| நாளை வாக்கு எண்ணிக்கை..போலீஸ் அதிரடி உத்தரவு.. அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து பேனர்!

மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 36 வாக்கு எண்ணும் மையங்களில் 300 மீட்டர் சுற்றளவில் மக்கள் கூடுவதை தடை செய்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.
அஜித் பவார், மும்பை போலீஸ்
அஜித் பவார், மும்பை போலீஸ்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவில் 66.05 வாக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், இந்தத் தேர்தலில் தொடக்கம் முதலே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்?

மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் மகாராஷ்டிராவில் பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. அந்த வகையில் பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி 140க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அதானிக்கு செக் வைத்த கென்யா.. 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து..!

அஜித் பவார், மும்பை போலீஸ்
மகாராஷ்டிரா | ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

இந்த நிலையில், மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 36 வாக்கு எண்ணும் மையங்களில் 300 மீட்டர் சுற்றளவில் மக்கள் கூடுவதை தடை செய்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அல்லது பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர, வேறு யாரும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் அலையவோ, கூட்டத்தை அமைக்கவோ கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 23ஆம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவுவரை அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து பேனர்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மகாராஷ்டிரா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், புனேயில் என்சிபி தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி அகற்றப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை கட்சியின் தலைவர் சந்தோஷ் நங்கரே ஒட்டியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சுவரொட்டியால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி! பின்னணி இதுதான்!

அஜித் பவார், மும்பை போலீஸ்
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com