ஆதார் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் உண்டா? நாளை விசாரணை

ஆதார் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் உண்டா? நாளை விசாரணை
ஆதார் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் உண்டா? நாளை விசாரணை
Published on

ஆதார் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் உண்டா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நாளை விசாரணை செய்கிறது.

ஆதார் குறித்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு இன்று தெரிவித்தது. தனி நபர் தகவல் ரகசியத் தன்மை பாதுகாப்பு என்பது குடிமகன்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. ஆதார் முறை தனி நபர் தகவல் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அதை தற்போது 9 நபர் அமர்வு விசாரிக்க உள்ளது. தனி நபர் தகவல் ரகசியத்தன்மை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த காலங்களில் வழங்கியிருந்தனர். ஆனால் ஆதார் முறை வருகைக்கு பின் அந்த தீர்ப்பு தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com