“குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை” - ம.பி அமைச்சர் இமார்த்தி தேவி 

“குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை” - ம.பி அமைச்சர் இமார்த்தி தேவி 
“குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை” - ம.பி அமைச்சர் இமார்த்தி தேவி 
Published on

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார். வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும் “குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் நமது வீடுகளிலும் பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம். அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய மாவட்ட அதிகாரி, முறையான சமையலறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com