அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதில், 17 முன்னணி நிறுவனங்களுடன் 7, 516 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்த ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம். இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை.
தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் இன்று நடைபெறுகிறது குரூப்-2 தேர்வு.இத்தேர்வில், 2, 327 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் போட்டி.
தமிழக அரசுக்கு பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் குத்தகை பாக்கி வைத்துள்ளது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம். அதிகபட்சமாக சென்னையில் 1,382 கோடி ரூபாய் குத்தகை நிலுவைத் தொகை உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஈரோடு அருகே துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் நிலத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் கட்டுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம். சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், எல்லையோர பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு. அப்போது, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என பேசியுள்ளார்.
டெல்லியில் கனமழையால் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்.இதனால்,வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் LED விளக்குகளால் அமைக்கப்பட்ட 2 கோடி விளக்குகளால் ஆன காட்சிகளை கண்டு வியந்த பார்வையாளர்கள்.
தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை குவித்து அபாரம்.
இன்று மாலை வெளியாகிறது 'தளபதி 69' படத்தின் அட்டகாசமான அப்டேட்.விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உச்சபட்ச எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.