இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|சென்னை சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் - சீமான் மீது வழக்குப்பதிவு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சென்னை சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் முதல் சீமான் மீது வழக்குப்பதிவு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • வயநாடு நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், காணாமல் போனவர்கள் 205 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

  • நிலச்சரிவில் உயிரிழந்த கூடலூரைச் சேர்ந்த சிறுமியின் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு. மேலும், 5 நாட்களாக கண்ணீருடன் மருத்துவமனையில் காத்துக்கிடந்த தந்தையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

  • வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளை வாங்கிக்கொள்ளலாம் என தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால், சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

  • சென்னையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • கலைஞர் நினைவுநாளில் நடைபெறும் அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • லவ் ஜிகாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் அசாமில் விரைவில் கொண்டுவரப்படும் என பாஜக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிப்பு.

  • காசாவில் உள்ள இரண்டு பள்ளிகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் படைகள்.இதனால், குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

  • இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது இலங்கை அணி.

  • ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அபாரம்.

  • ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார் நட்சத்திர வீரர் ஜோகோவிச். ஸ்பெயின் வீரர் அல்கராஸை வீழ்த்தி அசத்தல் வெற்றி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com