தலைப்புச் செய்திகள் | 350ஐ தாண்டிய நிலச்சரிவு மரணங்கள் முதல் இஸ்ரேலின் போர் நிறுத்த அழைப்பு வரை!
நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 350-ஐ தாண்டியது. மேலும், மீட்புப்பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.
நிலச்சரிவில் புதைந்தவர்களை உடல் வெப்பநிலையை உணரும் ட்ரோன்களைக் கொண்டு தேடும் பணி தீவிரம் களத்தில் இடைவிடாது பணியாற்றும் மீட்புக்குழு.
கேரளாவில் தீவிர மழையின் தாக்கத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள "MODEL PARAMETERS" நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வயநாடு பேரிடரின் மூலக்காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி.
வயநாட்டின் அடர் வனப்பகுதியில் பாறையின் இடுக்கில் கிக்கியிருந்த பழங்குடி மக்களை மீட்டது எப்படி? என்னும் திக் திக் நிமிடங்களின் அனுபவத்தை, புதிய தலைமுறையிடம் பகிர்ந்த வனக்குழு.
சென்னையில் ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு. இந்த ஹோட்டல்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்ததால் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக புகார். ஊர்த்தலைவர் உட்பட 10 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
ஈரோடு அருகே பிணையில் வெளியே வந்தவரை சிறை வாசலில் வைத்து மீண்டும் கைது செய்தனர் காவல்துறையினர். அப்போது "வேண்டாம், விட்டுவிடுங்கள்" எனக் கூறி மகனை கட்டிப்பிடித்து கதறி அழுத தாய்...
கர்நாடகாவில் சப்பாத்தி, கறிக்குழம்பு சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வெற்று அறிவிப்புகள் வேண்டாம் என ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் விமர்சனம்.
ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாதிப்பாரா இந்தியாவின் லக்ஷயா சென்?. இன்றைய அரையிறுதி போட்டியில் 2 ஆம் நிலை வீரர் விக்டர் ஃஆக்சல்சென்-ஐ எதிர்கொள்கிறார்.
தங்கம் வென்ற சீன வீராங்கனையிடம் காதல் ப்ரபோஸ் செய்த சக வீரர். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.