தலைப்புச் செய்திகள்| கேரள நிலச்சரிவில் பலி 270ஐ தாண்டியது To குத்துச்சண்டையில் காலிறுதியில் இந்தியா!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது 270ஐ தாண்டிய கேரள உயிரிழப்பு முதல் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதி சென்ற இந்தியா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • கேரளா நிலச்சரிவில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 270 ஐ தாண்டியது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்.மேலும், நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  • கனமழை மற்றும் நிலச்சரிவால் சின்னாபின்னமான கேரளாவின் சூரல்மலை, படிக்க அனுப்பிய 9 வயது மகளை பறிகொடுத்த தந்தை.

  • இயற்கையின் கோரத்தாண்டவத்தால். வெள்ளத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

  • நிலம்பூரில் இருந்து மேப்பாடிக்கு உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் சுமந்து செல்லப்பட்டன. மேலும், முண்டக்கை பகுதியில் மீட்புப்பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • அபாயகரமான முறையில் கயிற்றில் தொங்கியபடி சென்று மீட்புப்பணிகள் தீவிரம், இந்நிலையில்,நிலச்சரிவு குறித்து கேரள அரசை முன்கூட்டியே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்.

  • வானிலை ஆய்வு மையம் ஒருமுறைகூட சிவப்பு எச்சரிக்கை விடுக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு.

  • கேரளாவுக்கு தமிழக அரசு அறிவித்த 5 கோடி ரூபாய் நிதியுதவி ஒப்படைப்பு.முதலமைச்சர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு.

  • கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • டெல்லியில் மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

  • உத்தராகண்டிலும் மேகவெடிப்பால் கனமழை பெய்ததில், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.

  • சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், எதிர்காலத்தில் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதித்தது யுபிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்தவகையில், அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என தகவல்.

  • ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி.மேலும், மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com