இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | கொட்டிய தீர்த்த கனமழை To எலி மருந்தால் உயிரிழந்த 2 குழந்தைகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விடிய விடிய கொட்டிய தீர்த்த கனமழை முதல் எலி மருந்தால் உயிரிழந்த குழந்தைகள் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • சென்னை மாநகரில் இரவு நேரங்களில் கிண்டி, ராமாபுரம், முகப்பேர் பகுதிகளில் கனமழை பெய்தது.

  • நாகை, சீர்காழி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பரவலாக மழை. மெலும், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.

  • திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு. இந்நிலையில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் கள ஆய்வு நடத்துகிறார்.

  • தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காத, தொகுதி எம்.பி.கனிமொழி. வெளிநாடு சென்றிருப்பதால் கலந்துகொள்ளவில்லை என உதயநிதி விளக்கம்.

  • கால வரம்பற்ற வேலைநிறுத்தத்தை திரும்பப்பெற அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு. அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு.

  • மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தாயார் தரப்பு கிண்டி காவல் நிலையத்தில் புகார்.சம்பவத்தன்று இளைஞரை எட்டி உதைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

  • அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் முன்வைக்கும் புகார்கள் ரமணா பட பாணியில் உள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

  • நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கருத்து சொல்ல அனுமதிக்கவில்லை என நிர்வாகிகள் வெளிநடப்பு. இந்நிலையில், இதற்கு, சர்வாதிகாரம் இல்லாமல் கட்சியை வழிநடத்த முடியாது என சீமான் பேட்டி.

  • குன்றத்தூரில் வீட்டில் வைத்த எலி மருந்தால் மூச்சுத்திணறி குழந்தைகள் இருவர் உயிரிழப்பு. இதனால், மருந்து அடித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு.மேலும், எலி மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த வீட்டில் தடயவியல் துறை ஆய்வு. இந்நிலையில், அளவுக்கு அதிகமாக மருந்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தகவல்.

  • விழுப்புரத்தில் யானை தந்தத்தாலான பொம்மைகளை விற்க முயற்சி. 12 பேரை கைது செய்து காவல் துறை விசாரணை.

  • மண்டல, மகர விளக்கு பூஜை சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை முன்னிட்டு அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசால் தொடக்கப்பள்ளிகள் மூடல். அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலவே வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு.

  • இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம். தபால் ஓட்டு எண்ணிக்கையில் அதிபர் அநுர குமார திசநாயக்க கூட்டணி முன்னிலை.

  • நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பாரம்பரிய நடனமாடி சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்த இளம்பெண் எம். பி. மவோரி இன மக்களின் உரிமைகளை பறிப்பதாக மசோதாவை கிழித்து எறிந்தும் ஆவேசம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com