காலை தலைப்புச்செய்திகள்|மருத்துவரை தாக்கிய இளைஞர் முதல் நிதி பகிர்வு குறித்து பேசிய நிதியமைச்சர் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மருத்துவரை தாக்கிய இளைஞர் முதல் நிதி பகிர்வு குறித்து பேசிய நிதியமைச்சர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாட்கள் காவல்.மேலும், 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் மருத்துவரை தாக்கியதாக கைதானவர் வாக்குமூலம்.

  • மருத்துவர்களுடனான போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிப்பு.

  • அரசு மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் விளக்கம். மேலும், இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்கப்படும் என உறுதி.

  • சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் . அதிமுக சார்பில் ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர் நேரில் சென்று மருத்துவரை நலம் விசாரித்தனர்.

  • மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எல். முருகன், தமிழிசை, அன்புமணி, சீமான் உள்ளிட்டோர் கண்டனம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என விமர்சனம்.

  • தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது என தவெக தலைவர் விஜய் கண்டனம்.

  • சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பரவலாக மழை. கிண்டி, வடபழனி, ஆழ்வார்பேட்டையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

  • தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. மேலும், அதிகாரி நீதிபதியாக முடியாது என நீதிபதிகள் கருத்து.

  • நிதி ஒதுக்கீட்டில் எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலில் 66 புள்ளி 48 விழுக்காடு வாக்குகள் பதிவு.மேலும், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 64 புள்ளி 72 சதவிகித வாக்குகள் பதிவாகின

  • இலங்கையில் நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், அதிபர் அநுர குமாரவின் கூட்டணி பெரும்பான்மை பெறுமா என எதிர்பார்ப்பு.

  • அமெரிக்க அதிபராக தேர்வான ட்ரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிலையில். அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் செய்யப்படும் என பைடன் உறுதி.

  • ஸ்பெயின் நாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.மலாகா மாகாணத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்.

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வாகை சூடிய இந்திய அணி. சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் இளம்வீரர் திலக் வர்மா.

  • கேரளா, ஆந்திரா மாநிலங்களில் வெளியானது கங்குவா திரைப்படம். தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சிக்காக தயாராகும் சூர்யா ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com