தீபாவளி பண்டிகை முடிந்து ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் சென்னை திரும்பிய மக்கள். இதன்காரணமாக, கடலூர், உளுந்தூர்பேட்டை, பரனூர், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.
மதுரை, புதுக்கோட்டை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் ஊர் திரும்ப போதிய பேருந்துகள் இல்லாததால் ,கிடைத்த பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் அவதி.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை மக்களாட்சிக்கு அச்சுறுத்தல் எனவும், மாதந்தோறும் மின் கட்டண வசூல் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் தவெக செயற்குழு கூட்டத்தில், திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள் என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி ஆவேசம்.
ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்த, நான்கு பெண் இடைத்தரகர்கள் உள்பட ஐந்து பேர் கைது.
தஞ்சாவூரில் திமுக கொடிக்கம்பம் ஊன்றிய கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க செய்யும் ஏற்பாடுகளின்போது விபரீதம் ஏற்பட்டது.
மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி. தினமும் 10,000 பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு.
எல்லையில் இருந்து பின்வாங்கிய இந்திய, சீன படைகள். இதனால்,உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.
அன்பு மற்றும் அரவணைப்பு அரசியல்தான் தற்போதைய இந்தியாவுக்கு தேவை என வயநாட்டில் பிரியங்காவை ஆதரித்து ராகுல் காந்தி பேச்சு.
வாக்கு அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என மக்களிடம் கமலா ஹாரிஸ் வேண்டுகோள். இதனிடையே அதிபரானதும் ஹாரிஸ் செய்த தவறுகளை சரிசெய்வேன் என ட்ரம்ப் பேச்சு.
ஸ்பெயினில் மன்னர் மற்றும் ராணி மீது சகதியை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்தபோது கோபம்.
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி தோல்வி. இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மோசமான தருணம் என கேப்டன் ரோகித் சர்மா உருக்கம்..