சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு.
சென்னை மெரினாவில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் நியமிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு. மேலும், மக்களின் பாதுகாப்பில் அரசு அக்கறை காட்டவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
விமானப்படை கோரியதற்கு மேலாகவே தமிழக அரசால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.
விமான சாகசம் முடிந்த பின் ஏற்பட்ட நெரிசலில் சிக்கத்தவித்த பொதுமக்கள் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டதாக புகார் .மேலும், காவல்துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஆதங்கம்.
விமான சாகசத்தை காண ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள்.இந்நிலையில்,சென்னையில் நேற்று ஒரே நாளில் புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்ததாக ரயில்வே தகவல்.
அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட்டுகளுடன் உதயநிதி பங்கேற்பதாக புகார். இந்நிலையில், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை.
விஜயதசமியையொட்டி தமிழ்நாட்டில் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி. மேலும், சீருடை அணிந்து கையில் கொடியேந்தி ஏராளமானோர் ஊர்வலம்.
மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை. இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. நான்கு மாட வீதிகளில் திரண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
வடமாநிலங்களில் களைகட்டும் நவராத்திரி திருவிழாவில், பார்வையாளர்களை கவர்ந்த பாஜக எம். பி ஹேம மாலினியின் கலைநிகழ்ச்சி.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டம்.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல். மேலும், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.