லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் வீரர்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்த ஹெஸ்புல்லா.இதனால், விமானப்படை தளபதிகள் 3 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லெபானானைத் தொடர்ந்து சிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை வீசியதில், 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.
இஸ்ரேலுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக அமெரிக்கா இருக்கும் என அதிபர் பைடன் உறுதி. மேலும்,ஈரானின் அணு உலை தளவாடம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம்.மேலும், தங்களுக்கு எதிராக செயல்படுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டிய நிலையில் குட்டேரஸ் இப்பதிவினை வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்குச்செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்.மேலும், இஸ்ரேலில் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி பாதுகாப்பாக இருக்க அறிவுரை.
ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ராவின், தாயார் செய்து கொடுத்த உணவை சாப்பிட்டு உணர்ச்சிமயமான பிரதமர் மோடி பின்னர், விளையாட்டில் நீரஜ் வலிமையுடன் செயல்படுவதை போல, தேசத்திற்காக சேவையாற்ற வலிமை தந்திருப்பதாக கடிதம்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம். மேலும், தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்.
ஆளுநர் ரவி அரசியல்வாதியைப் போல செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் மத்திய - மாநில அரசுகளின் உறவை துண்டிக்கும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை இருப்பதாகவும் கண்டனம்.
துணை முதலமைச்சர் உதயநிதி் ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் மணமுறிவு குறித்து தெலங்கானா பெண் அமைச்சர் பரபரப்பு கருத்து தெரிவித்தநிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியலை புகுத்த வேண்டாம் என சமந்தா கண்டனம்.
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளநிலையில், காப்பு கட்டி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சென்னை மாநகராட்சி. இதனால், வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்காக 36 படகுகளை முன்கூட்டி வாங்கப்பட்டுள்ளனர்.
மகளிருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லா நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்தது வேட்டையன் பட டிரெய்லர். இந்நிலையில், வரும் 10 ஆம்தேதி திரையரங்களில் வெளியாகும் என தகவல்.