இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|வண்ணமயமாக ஜொலித்த பாரீஸ் நகரம் - சவால் விடுத்த நடிகர் விஷால்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வண்ணமயமாக ஜொலித்த பாரீஸ் நகரம் முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்த நடிகர் விஷால் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • மழைக்கு மத்தியில் உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் திருவிழா தொடக்கம். இதனால், வண்ணமயமாக பாரீஸ் நகரம் ஜொலித்தது.

  • ஒலிம்பிக் போட்டியில் ஈபிள் கோபுரம் அருகே பாயும் செய்ன் நதியில் 85 படகுகளில் அணிவகுத்த வீரர், வீராங்கனைகள். இதில், இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து, சரத் கமல் ஏந்திச் சென்றனர்.

  • ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்த, பிரான்ஸ் முன்னாள் தடகள வீரர் மேரி- ஜோ-பெரெக் மற்றும் ஜூடோகா டெடி ரைனர். ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் ஒலிம்பிக் சுடருடன் வலம் வந்து உற்சாகம்.

  • கண்கவரும் இசை, நடனம், லேசர், ட்ரோன் சாகச நிகழ்ச்சிகளால் விழாக்கோலம் பூண்டது பாரிஸ் நகரம். இந்நிகழ்வில் செய்ன் நதிக்கரையின் இருபுறங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர்.

  • ஒலிம்பிக்கில் இன்று துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ் என முக்கிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.

  • எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம். இதில், மத்திய அரசின் பாகுபாட்டை கண்டித்து கூட்டத்தில் குரல் கொடுப்பேன் என மம்தா பானர்ஜி அறிவிப்பு.

  • காவிரி ஆற்றில் பேரிரைச்சலுடன் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடியதால், கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 981 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

  • நீர்வரத்து அதிகரிப்பால் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணையால், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

  • கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்வதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு. மேலும், திமுக தயவால் தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும் விளக்கமளித்துள்ளார்.

  • ஈவிகேஎஸ் இளங்கோவனின் குற்றச்சாட்டிற்கு கார்த்தி சிதம்பரம் விளக்கமளித்துள்ள அவர், காங்கிரஸ் கூட்டத்தில், தான் பேசிய முழு வீடியோவை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்குமாறு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • காஞ்சிபுரம் அருகே பெயிண்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், காலி ஸ்ஃபிரே பெயிண்ட் பாட்டில்கள் வெடித்து சிதறிய காட்சிகள் காண்போரை பதைப்பதைக்க வைத்தது.

  • தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com