காலை தலைப்புச் செய்திகள்| ’ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்’ To ’ஆட்சி அமைக்க உரிமை கோரிய அதிஷி’!

காலை தலைப்புச் செய்தியானது, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முதல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • வரும் 21ஆம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

  • ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இந்நிலையில், அசம்பாவித நிகழ்வுகளை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

  • தமிழகத்திற்கு திமுக இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவை எனவும், முழுமையான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என்றும் உறுதி.

  • அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக்குவதில் என்ன தயக்கம்?..அதில் காலம் தாழ்த்தவேண்டாம் என முதல்வர் ஸ்டாலினிடம் முன்னாள் எம்.பி. பழனிமாணிக்கம் கோரிக்கை.

  • திமுகவை கம்பீரமாக ஆட்சிப் பொறுப்பில் அமரச் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என கட்சியின் பவள விழாவில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் கருணாநிதி உரை.

  • சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக பவள விழா நடைபெற்றது. அதில், முன்னாள் எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட 6 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவம்.

  • தொழில் முதலீட்டில் தென்மாவட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது..எனவே, முதலமைச்சர் கவனம் செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தல்.

  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முறையாக அழைப்பு வந்தால் பரிசீலிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

  • சென்னையில் தந்தை பெரியார் திடலுக்கு நேரில் சென்று த.வெ.க தலைவர் விஜய் மரியாதை.இந்நிலையில், திராவிட சாயத்தை விஜய் பூசிக் கொண்டுள்ளதாக தமிழிசை விமர்சனம்.

  • புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கா னோர் மேற்பட்டோர் கிரிவலம். இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரை மணலில் தீபமேற்றி வழிபாடு.

  • கொல்கத்தாவில் போராடும் மருத்துவர்கள் நள்ளிரவை தாண்டி ஆலோசனை.மேலும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மீண்டும் அறிவிப்பு.

  • டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அர்விந்த் கெஜ்ரிவால். தொடர்ந்து, துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீதான இரண்டாவது கொலை முயற்சி எதிரொலியால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் கமலா ஹாரிஸ்.

  • லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர் குண்டுகள் மூலம் நடந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு. இத்தாக்குதல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு.

  • ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கியில் பட்டம் வென்றது இந்தியா. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அபாரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com