Headlines | ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகார் முதல் ராகுல் காந்தி குறித்து சர்ச்சையாக பேசிய MLA வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டர் முதல் ராகுல் காந்தி குறித்து சர்ச்சையாக பேசிய எம்எல்ஏ வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • மேற்குவங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதலமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மருத்துவர்களில் 99% கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.

  • கொல்கத்தா காவல் அதிகாரிகளை மாற்ற அரசு ஒப்புக்கொண்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என மருத்துவர்கள் அறிவிப்பு. இருப்பினும் கோரிக்கைகளை செயல்படுத்தும்வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டம்.

  • தமிழ்நாட்டில் 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 12 லட்சம் ரூபாய் பறிமுதல்.

model image
model imagefreepik
  • பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது நுழைந்த கட்டுவிரியன் பாம்பை அடித்துக்கொன்று தூக்கி வீசிய அதிகாரிகள்.

  • டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவை இன்று சந்தித்து பதவி விலகுகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். இதனைத்தொடர்ந்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்கோப்புப்படம்
  • ராணிப்பேட்டையில் அமைகிறது லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை. இதற்கு, வரும் 28ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் பவள விழா சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • பாடகர் மனோவின் மகன்கள், இருவரை தாக்கியதாக கூறப்படுவதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, மனோவின் மகன்கள் கல், கட்டையால் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடப்பட்டுள்ளது.

  • தேசிய விருது பெற்ற திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார். இதன்படி, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பெண் குற்றச்சாட்டு.

  • ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் 11 லட்சம் ரூபாய் பரிசு என்று, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவசேனா ஷிண்டே அணியின் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு.

  • அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி.இதில், சம்பவ இடத்தில் கொலையாளி 12 மணி நேரம் காத்திருந்ததாக தகவல்.

  • அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்து வானுயரத்திற்கு கொழுந்துவிட்டு தீ ஏற்பட்டது. இதனால், மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

  • ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கியில் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. மேலும், மற்றொரு அரையிறுதியில் சீனாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பாகிஸ்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com