HeadLines|நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் To யெச்சூரியின் உடல் ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் To யெச்சூரியின் உடல் ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு ஆகியவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • கடலூரில் இருந்து உத்தராகண்ட்டுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கித்தவிப்பு. இந்நிலையில், வானிலை சீரானதும் அவர்கள் மீட்கப்படுவர் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் புதிய தலைமுறையிடம் தகவலளித்துள்ளார்.

  • சென்னையில் இன்று ஆயிரத்து 500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு. தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.

  • அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சை மீண்டும் பதிவிட்ட திருமாவளவன் 2 முறை நீக்கப்பட்ட நிலையில் 3ஆவது முறையாக முழு வீடியோவும் பகிரப்பட்டது.

  • மது ஒழிப்பு மாநாட்டை அரசியல் கணக்கு என சிலர் திசைத் திருப்ப முயல்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு. அதிமுகவை மாநாட்டிற்கு அழைத்தது தொடர்பான கேள்விக்கு திருமாவின் கருத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பதில்.

  • வேண்டப்பட்டவர்களை வேலையில் நியமித்து ஓட்டு போட்ட மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என பணி நியமன முறைகேடு வழக்கில் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

  • ஆம்பூர் அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த காரில், இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

  • பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷை மீண்டும் கைது செய்தது சிபிஐ. ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் கைதான நிலையில் தற்போது கொலையில் சாட்சியங்களை கலைத்த புகாரில் கைது செய்துள்ளது.

  • கேரளா உட்பட உலகெங்கும் உள்ள மலையாளிகள் இன்று ஓணம் கொண்டாட்டம்.

  • இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் ராகுல் காந்தி என ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் விமர்சனம்.

  • மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கட்சி பேதமின்றி இறுதி மரியாதை செலுத்திய தலைவர்கள். இந்நிலையில்,மருத்துவ ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது.

  • காஷ்மீர் தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கிக் கொண்டிருக்கும் இன்ஜினியர் ரஷீத். இந்நிலையில், சூழ்ச்சிகளை முறியடித்து ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை.

  • இலங்கை உள்நாட்டுப்போரில் காணாமல் போனவர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உறுதி.

  • ருமேனியா, போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கனமழையால் கடும் பாதிப்பு. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இடிந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி நால்வர் உயிரிழப்பு.

  • ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.இந்தவகையில், ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com