இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் - பிரேசிலில் X வலைதளத்திற்கு தடை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இரவில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் முதல் பிரேசிலில் எக்ஸ் வலைதளத்திற்கு தடை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்Facebook
Published on
  • தமிழகத்திற்கு மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

  • அரசியல் வேறுபாடுகளை விலக்கிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரமான கல்வியை அளிக்க முன்வர வேண்டும் என PM SHRI ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.

  • மத்திய அரசு வேறு எந்த கல்விக் கொள்கையை திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்.

  • முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையே 900 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

  • தெற்காசியாவிலேயே இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தும் முதல் நகரமாகிறது சென்னை. இந்நிலையில், இரவில் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால்,வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

  • திருச்சி என்.ஐ.டி.யில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது. இதனையடுத்து, மாணவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என என்.ஐ.டி. நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

  • பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் புகாரளிக்கச் சென்ற மாணவியிடம் இழிவாக பேசியதாக காவல்துறை மீது இபிஎஸ் குற்றச்சாட்டு. இது, உண்மைக்கு புறம்பான செய்தி என திருச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

  • பாலியல் புகாரில் சிக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் பதவி விலக வலியுறுத்தல். இதனை வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் போராடிய இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த காவல்துறையினர்.

  • தூத்துக்குடி தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிந்ததில் மூச்சுத்திணறி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. , ஆலை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

  • பிரேசிலில் எக்ஸ் வலைத்தளத்திற்கு தடை. இதற்கு, உண்மையை மக்கள் அறிவதை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுவதாக எலான் மஸ்க் விமர்சனம்.

  • பாரீஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள். ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் பதக்கங்களை வென்று வீரர்-வீராங்கனைகள் அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com