இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மத்திய பட்ஜெட் முதல் நீட் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, மத்திய பட்ஜெட் முதல் நீட் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
பட்ஜெட் 2024 | நீட்
பட்ஜெட் 2024 | நீட்முகநூல்
Published on
  • நேற்று நடந்த பட்ஜெட் தாக்கலின்போது, 2024-25ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிநிலை வலுவாக உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருக்கும் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு நிதி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய வருமானவரி நடைமுறையில் மாற்றங்கள் அறிவித்தது மத்திய அரசு. இதன்படி, ஆண்டு வருவாய் 7.75 லட்சம் ரூபாய் வரை இருப்போருக்கு வரி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பட்ஜெட் எதிரொலியாக சவரனுக்கு 2,080 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.

தங்கம்
தங்கம்புதிய தலைமுறை
  • வரி குறைப்பால் செல்போன், மின்சார வாகனங்கள், தோல் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதன்படி, பிளாஸ்டிக், தொலைத்தொடர்பு மற்றும் சூரியஒளி மின்னுற்பத்தி சாதனங்களுக்கான வரி அதிகரிப்பு.

  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியாவை நிலைநிறுத்த மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என பிரதமர் மோடி பெருமிதம்

பட்ஜெட் 2024 | நீட்
பட்ஜெட் 2024 - 25: “தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் இல்லை” – எம்.பி. சு.வெங்கடேசன்
  • பாஜக கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சனம். மேலும், மத்திய பட்ஜெட்டில் பாஜக ஆளாத மாநிலங்களை பாரபட்சமாக நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு.

  • I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்புத் திட்டங்களும் இல்லை என்று குற்றச்சாட்டு.

  • டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முடிவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபல் அறிவிப்பு.

  • நீட் மறுதேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம். தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்.

  • மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. நேபாளத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com