தலைப்புச்செய்திகள்|சாதனையை தவறிவிட்ட ஷீத்தல் தேவி To போலியோ தடுப்பூசிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட போர்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சாதனையை தவறிவிட்ட ஷீத்தல் தேவி to போலியோ தடுப்பூசிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட போர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அள்ளித் தரும் அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக பெருமிதம்.

  • சென்னையில் இன்று தொடங்குகிறது ஃபார்முலா 4 கார் பந்தயம். இதனால், தீவுத்திடலை சுற்றிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • மலையாள நடிகர் சங்க மூத்த நிர்வாகிகள் மாஃபியா கும்பல் போல் செயல்படுகின்றனர் என்று பாலியல் தொல்லை புகார் கொடுத்த நடிகை புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷை 5 நாட்கள் கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

  • கேரள திரைப்படச் சங்கத்தினர் பதவி விலகியது கோழைத்தனமானது என பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை பார்வதி விமர்சனம் செய்துள்ளார்.

  • நடிகைகளிடம் தவறாக அணுகும் நபர்களை காலணியால் அடிக்க வேண்டும் என நடிகர் விஷால் ஆவேசம் . இதற்கு, தம்மிடம் நிறைய காலணிகள் இருக்கிறது என்று கூறி விஷாலை சீண்டியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

  • திருப்பதியில் லட்டு வாங்க இனி ஆதார் அட்டை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் லட்டுகள் விற்கப்படுவதை தவிர்க்க தேவஸ்தானம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

  • வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவாலயங்களில் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.இதில், லட்சக்கணக்கானோர் திரண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

  • திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் விடிய விடிய போராட்டம்.

  • மன்னர் வகையறா படத்திற்கான கடனை திருப்பி தரக்கோரிய வழக்கில் 3 கோடி ரூபாய் பணத்தை 18 சதவீத வட்டியுடன் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பாராலிம்பிக் வில்வித்தையில் ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறிவிட்ட ஷீத்தல் தேவி. இரண்டாம் இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.

  • அமெரிக்க ஓபன் டென்னிஸில் சின்னர், கோஃபின் உள்ளிட்ட வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை வெற்றி.

  • காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்துவதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com