தலைப்புச் செய்திகள் | 'ரஜினியின் கருத்துக்கு துரைமுருகன் பதிலடி' To 'நிறைவுப்பெற்ற முருகன் மாநாடு'!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி முதல் நிறைவுப்பெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • பழனியில் இரு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெற்றநிலையில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஆன்மிகச் செம்மல் பட்டம் வழங்கப்பட்டது.

  • பழைய மாணவர்கள் என்ற ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி. இந்நிலையில், வயதான மூத்த நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • திமுகவில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

  • மைக் கிடைத்தால் அண்ணாமலை பொய்யாக பேசுவார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் .மேலும், தன்னை பற்றி பேச எந்த அதிகாரமும் இபிஎஸ்-க்கு இல்லை என அண்ணாமலை ஆவேசம்.

  • சென்னை தினம் கொண்டாடத்திற்கு திருவான்மியூரில் உள்ள கடற்கரையில் மக்கள் கூட்டம் கூடியதால், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில், கஞ்சா, கத்திகள், திருடப்பட்ட 42 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • சென்னை கோயம்பேடு மதுபான பாரில் பணம் மோசடி செய்யப்பட்டதால், வடமாநில ஊழியர்கள், பார் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  • நாஜிப் படைகளின் பிடியில் இருந்து பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டதன் ஆண்டு விழா புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தின் அடியில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடப்பட்டது.

  • ஒலிம்பிக்கில் தென்கொரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்த விவகாரத்தில், வடகொரிய டென்னிஸ் இணை தண்டனைக்கு உள்ளாக வாய்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com