காலை தலைப்புச் செய்திகள்|கட்சிக்கொடியை அறிமுகம் செய்யும் விஜய்- போராட்டத்தில் பங்கேற்ற கங்குலி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கட்சிக்கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் போராட்டத்தில் பங்கேற்ற கங்குலி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • போலந்தில் இந்திய வம்சாவளியினர் முன்பு உரையாற்றிய பிரதமர் மோடி , எந்த நாட்டில் பிரச்னை என்றாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடு இந்தியாதான் என பெருமிதம் தெரிவித்தார்.

  • 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் தகவல். மேலும்,சென்னையில் மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களிலும் முதலீடுகள் பரவலாக்கப்படும் என்றும் உறுதி.

  • சென்னை பனையூரில் இன்று கட்சிக்கொடியை அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய். நாடெங்கும் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், செபி தலைவர் பங்குகள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹிண்டன்பெர்க் அறிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் இன்று போராட்டம் மேற்கொள்ளவுள்ளது.

  • திமுக துணையோடு மலையேற முடியும் என அண்ணாமலை நினைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். இதற்கு, அதிமுகவினர் தங்களை பார்த்து, தாங்களே பரிதாபப்படும் நிலையில் இருப்பதாக அண்ணாமலை பதில்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மொட்டை கிருஷ்ணனுக்கு எந்த பண உதவியும் வழங்கவில்லை என்றும், ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா விளக்கமளித்துள்ளார்.

  • வாணியம்பாடியில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக்கொலை. இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

  • திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு. சகோதரர்களின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியது கிராமம்.

  • ஆந்திராவில் தாழ்வாக சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு. மேலும், உடல் முழுவதும் தீக்காயமடைந்த மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் படுத்துறங்கி, இரவு நேர மின்வெட்டைக் கண்டித்து நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

  • குற்றாலம் பேரருவியில் திடீரென உருண்டு வந்த பாறாங்கற்கள் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

  • மேட்டுப்பாளையம் அருகே அரசுப்பள்ளியில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். இந்நிலையில், ஆசிரியரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

  • கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டி, மெழுகுவர்த்தி ஏற்றி நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பங்கேற்பு.

  • மும்பை சித்தி விநாயகர் கோயிலுக்கு டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை ஏந்திச் சென்ற ரோகித் ஷர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் இணைந்து வழிபாடு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com