மருத்துவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் -பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க பிரமோத் பகத்திற்கு தடை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சிபிஐ-க்கு மாற்றப்பட்ட மருத்துவர் கொலை வழக்கு முதல் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க பிரமோத் பகத்திற்கு தடை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்Facebook
Published on
  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்தால், மருத்துவ சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

  • சுகாதாரத் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிடுவதாக் ஒரு மருத்துவர் சங்கம் அறிவிப்பு. மேலும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என மற்ற சங்கங்கள் திட்டவட்டம்.

  • தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தொடர்ந்த வழக்கில் மூன்றாவது முறையாக தீர்ப்பை ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம்.

  • 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் மதிப்பிலான 15 முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.

  • துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

  • திருவண்ணாமலை அருகே 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு; தமிழகம் முழுவதும் குளிர்பான ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

  • தமிழகத்தில் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் 5 பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவிக்கும் கல்வியாளர்கள்.

  • செபி தலைவர் மாதபியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்.

  • நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கண்ணை கவரும் மின்னொளியில் அரசு கட்டடங்கள் ஜொலிக்கின்றன.

  • டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், ஊக்க மருந்து சோதனை தொடர்பான விதிமுறைகளை மீறியதால் 18 மாதங்களுக்கு பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com