இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|கேள்வி எழுப்பிய ஹிண்டன்பர்க் நிறுவனம் To 20 ஆண்டுகளில் இல்லாத கனமழை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, செபி தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஹிண்டன்பர்க் நிறுவனம் முதல் 20 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்த விழுப்புரம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முக்நூல்
Published on
  • குற்றச்சாட்டுகள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு செபி தலைவர் மாதவி புரி புச் தயாரா?எனவும், அவரது கட்டுபாட்டில் இருந்த சிங்கபூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் யார் என கூறுவாரா எனவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • ஹின்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தாவிட்டால் போராட்டம் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  • ஹின்டன்பர்க் அறிக்கை இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சி என பாரதிய ஜனதா விமர்சனம் .

  • அதிர்ச்சியளிக்கும் மேற்குவங்க பயிற்சி மருத்துவரின் உடற்கூறாய்வு அறிக்கை. மேலும்,கொலைக்கு பின் எவ்வித பதற்றமும் இன்றி நிம்மதியாக கொலையாளி படுத்துறங்கியதாக காவல்துறை அதிர்ச்சி.

  • மேற்குவங்க முதுநிலை மருத்துவ மாணவி கொல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பயங்கரத்தில், மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவிப்பு.

  • திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறும். மேலும்,அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே நாளில் திமுகவும் ஆலோசனை.

  • தருமபுரியில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிவந்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய மேலும் இருவரை பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

  • தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுவரை இயல்பை விட 91 விழுக்காடு அதிக மழை பதிவுவாகியுள்ளது. மேலும், சென்னையில் இயல்பை விட 100 விழுக்காடு அதிக மழை பதிவாகியுள்ளது.

  • 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விழுப்புரத்தில் கனமழை பதிவாகியுள்ளது. நான்கே நாளில் 181 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

  • திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

  • இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்திலும், சிறந்த கல்லூரியாக டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடமும், தமிழ்நாட்டை சேர்ந்த பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, லயோலா கல்லூரிகள் 7 மற்றும் 8 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

  • வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

  • பிணை கோரி பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், பதில் அளிக்க சிபிஐ, மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ததால், தென்காசி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் லெப்டினட் ஜென்ரல் பையஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com