தலைப்புச் செய்திகள் | செபி தலைவர் குறித்த அதிர்ச்சி தகவல் To 10 லட்சம் நிதியுதவி வழங்கிய செஸ் வீரர்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, செபி தலைவர் குறித்த அதிர்ச்சி தகவல் முதல் 10 லட்சம் நிதியுதவி வழங்கிய செஸ் வீரர் குகேஷ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • செபி தலைவர் அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

  • வயநாடு துயரத்தில் கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது . நிதியின்றி எந்த பணியும் நிற்காத வகையில் உதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி.

  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து பேசினார்.

  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம், காயமடைந்த 4 வீரர்கள் உட்பட 6 பேருக்கு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • மாலத்தீவு அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு. இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை.

  • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்.

  • வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி என உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் வீரர் குகேஷ் அறிவிப்பு..

  • ஏற்காடு எல்லோ லேக் கிளப்பை மூடி சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.அனுமதியின்றி செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • தகுதிநீக்கத்தை எதிர்த்த வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டின் தீர்ப்பு ஒத்திவைப்பு. மேலும், 13ஆம் தேதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அறிவிப்பு..

  • இன்று நள்ளிரவு நடைபெறுகிறது பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா. இந்நிலையில், இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏமனு பாக்கர் மற்றும் ஸ்ரீஜேஷ் ஏந்தி செல்லவுள்ளதாக தகவல்.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் 39 தங்கத்துடன் முதல் இடம் பிடித்த சீனா ஒரு வெள்ளி உட்பட 6 பதக்கங்களுடன் 70ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

  • ஏமனில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

  • சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த புதிய தலைமுறை. 6 பிரிவுகளில் 12 பேருக்கு தமிழன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com