கார்கில் வெற்றி தினத்தை ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இந்நாளை, வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.