இன்றைய பங்குச் சந்தை நிலவரம்: நிப்டி, சென்செக்ஸ் உயர்வு

நேற்று வர்த்தகமானது 24472.10 புள்ளிகள் நிறைவடைந்த நிலையில் இன்று 24378.15 புள்ளிகளில் சந்தையானது தொடங்கியது.
தங்கம் மற்றும் பங்குச் சந்தை
தங்கம் மற்றும் பங்குச் சந்தைபுதியதலைமுறை
Published on

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

நிப்டி

நேற்று வர்த்தகமானது 24472.10 புள்ளிகள் நிறைவடைந்த நிலையில் இன்று 24378.15 புள்ளிகளில் சந்தையானது தொடங்கியது. நேற்று சரிவை சந்தித்து வந்த வர்த்தகமானது இன்று 100 புள்ளிகள் அதிகரித்து 24570 புள்ளிகளில் நிப்டியானது வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தைபுதிய தலைமுறை

சென்செக்ஸ்

அதே போல் நேற்று 80220 புள்ளிகளில் முடிவடைந்த சென்செக்ஸ் இன்று 79921.13 புள்ளிகளில் சரிவுடன் வர்த்தகமானது தொடங்கியது. இருப்பினும் தற்பொழுது 322 புள்ளிகள் அதிகரித்த நிலையில் சென்செக்ஸ் 80535 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் நிப்டியானது 19000 ற்கும் கீழே வர்த்தமான நிலையில் 2024 செப்டம்பரில் அதிகபட்ச உட்சமாக 26270 புள்ளிகளில் வர்த்தகமானது. இடையில் சில ஏற்ற தாழ்வுகள் இருந்தன.

சந்தை ஏன் வீழ்ச்சியடைந்தன ?

இரண்டாம் காலாண்டில் ஐடி துறையின் வருவாய் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருந்ததால் அது சந்தையை பாதித்தது.

சீனாவின் பொருளாதார நிலை இந்திய சந்தைகளை பாதித்தது. சீன வங்கி முக்கிய கடன் விகிதத்தை 3.85%-ல் இருந்து 3.6% ஆகவும், ஒரு வருட கடன் பிரைம் வீதத்தை 3.35%-ல் இருந்து 3.1% ஆகவும் குறைத்துள்ளது.

pt web

அதே போல், மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை கண்டது.

வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாலும் இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டது.

இன்றைய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ 40 அதிகரித்து 7,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 58,720க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் அதிகருத்து ஒரு கிராம் 112 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com