தலைப்புச் செய்திகள் | திருப்பதியில் 4 மணிநேரம் புனித சடங்கு முதல் லெபனானில் பயங்கர தாக்குதல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திருப்பதி கோயிலில் நடந்த 4 மணிநேரம் புனித சடங்கு முதல் லெபனானில் பயங்கர தாக்குதல் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • ‘மனிதகுலத்தின் வெற்றி என்பது ஒற்றுமையில்தான் இருக்கிறது; போர்க்களங்களில் அல்ல’ என ஐநா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரை.

  • உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சந்திப்பு. ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என திட்டவட்டம்.

செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
  • லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 490-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. தாக்குதல் மேலும் விரிவுபடுத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

  • “மதச்சார்பற்ற சமதர்ம இந்தியாவை உருவாக்க, ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என சென்னையில் நடைபெற்ற சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • “திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 60 விழுக்காடு செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. முதலீடுகளை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்.

  • தமிழக மீனவர்கள் கைது தொடரும் நிலையில் 40 எம்பிக்கள் எங்கே சென்றனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி. மேலும், ஏனோதானோவென்று கடிதம் எழுதிக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதாகவும் முதலமைச்சர் மீது விமர்சனம்.

  • திருப்பதி லட்டு தயாரிக்க மிருக கொழுப்பு கலந்த நெய்யை கலந்ததாக கூறப்படும் விவகாரத்தில், திண்டுக்கல் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நோட்டீஸ்.

  • தோஷம் விலக திருப்பதி கோயிலில் 4 மணிநேரம் புனித சடங்கு, இந்தநிலையில், தேவஸ்தானத்தின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.

  • என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் கூறாய்வு நிறைவடைந்தநிலையில், உடல் முதல் மனைவியிடம் ஒப்படைப்பு.

  • திருச்சியில் தேடப்பட்டு வந்த ரவுடி ஜம்புகேஸ்வரனை காலில் சுட்டுப்பிடித்த காவல்துறை. விசாரணையின்போது தப்பியோட முயன்றதாகக் கூறி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

  • உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களிடம் பண மோசடி செய்யப்படுவதாக புகார். மேலும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
அன்னபூர்ணா விவகாரம்: "வரித்தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்கு ..." - சூசகமாக பேசிய நிர்மலா சீதாராமன்
  • கொடைக்கானல் மேல்மலையில் நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் நிபுணர்கள் ஆய்வு. நீர் வழித்தடமாக இருப்பதால் மண் பகுதி இளகி வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருத்து.

  • சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் நடவடிக்கை.

  • கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க ஆளுநர் அளித்த அனுமதிக்கு எதிரான வழக்கில், இன்று நண்பகலில் தீர்ப்பளிக்கிறது அம்மாநில உயர்நீதிமன்றம்.

  • ஜம்மு காஷ்மீரில் ஓய்ந்தது 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியது. இதனால், 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • பெங்களூருவில் இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில், பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசாச்சார் ஸ்ரீஷானந்தா.

  • ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டது லாபத்தா லேடீஸ் திரைப்படம் என இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு.

  • இலங்கையின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸநாயக பதவியேற்றார். இந்நிலையில், சர்வதேச நாடுகளோடு கரம் கோர்த்து முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்லப் போவதாக உறுதி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இலங்கையின் 9 ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com