Headlines: கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் முதல் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கொல்கத்தாவில் போராட்டத்தை வாபஸ் பெறும் மருத்துவர்கள் முதல் திருப்பதி லட்டில் இருந்த விலங்குகளின் கொழுப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Headlines
Headlines facebook
Published on
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 கிராமங்களை உள்ளடக்கி அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு உள்ளது ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவு வெளியீயாகியுள்ளது.

  • திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது புகார் அளிக்க முடிவு என தேவஸ்தான குழுவின் முன்னாள் உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி தகவல்.

திருப்பதி லட்டு விவகாரம்
திருப்பதி லட்டு விவகாரம்முகநூல்
  • ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானின் விருப்பங்கள் நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி பரப்புரை. பயங்கரவாதிகளின் சதி திட்டங்களை முறியடித்து தேர்தலை நடத்தி வருவதாகவும் பெருமிதம்.

  • வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெறுவதாக கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அறிவிப்பு. மேலும், நாளை பணிக்கு திரும்ப உள்ளதாகவும் தகவல்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக பகுஜன் சமாஜ் குற்றச்சாட்டு. இந்நிலையில், யாரோ ஒருவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க முடியாது என செல்வப்பெருந்தகை தகவல்.

Headlines
ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி மாட்டு ராஜா கைது - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பா?
  • திருப்பத்தூர் அருகே தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக அழைத்து சென்று சிறுவர்கள் இருவர் கொலை. இந்நிலையில், வாங்கிய கடனை திருப்பி தராததால் நண்பரின் மகன்களை கொலை செய்தவர் கைது.

  • குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை மேலும் அதிகரிக்க திட்டமா? ... இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி தகவல்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முகநூல்
  • வந்தவாசியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது.தொடர்ந்து, 7 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்.

  • ஹரியானாவில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி என பாஜக தேர்தல் அறிக்கை. மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி.

  • வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது அஸ்வின் - ஜடேஜா இணை. முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்கள் குவிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com