தலைப்புச் செய்திகள் | குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி முதல் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி முதல் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ஜிஎஸ்டி - தேசிய கல்விக் கொள்கை
ஜிஎஸ்டி - தேசிய கல்விக் கொள்கைpt web
Published on
  • புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12இல் இருந்து 5% ஆக குறைத்தும், மிக்சர், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களுக்கும் வரியை 18இல் இருந்து 12% ஆக குறைத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலெத் மொகமத் பின் சந்திப்பு. இந்தவகையில், இரு நாடுகளுக்கிடையில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

  • தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை மறுப்பதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி - தேசிய கல்விக் கொள்கை
"இலக்கை அடையாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி; சிறப்பாக செயல்பட்டால் நிதி மறுப்பு" - முதல்வர் ஸ்டாலின்
புதிய கல்வி கொள்கை
புதிய கல்வி கொள்கை
  • அரசியல் ஆதாயங்களை விட மாணவர்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

  • எந்த காலத்திலும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் வழங்கமாட்டோம் என தமிழக இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி உறுதியளித்துள்ளார்,

  • 2025ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கணிப்பு.

  • தமிழக வெற்றிக்கழக மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை. இந்நிலையில், மாநாட்டை இம்மாதமே நடத்துவதில் உறுதியாக இருப்பதாக விஜய் பேச்சு.

  • சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிண்டி ரேஸ்கோர்ஸ்
கிண்டி ரேஸ்கோர்ஸ்
  • நெல்லை ராதாபுரம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்து வாஷிங்மெஷினில் மறைத்து வைத்த எதிர்வீட்டு பெண்மணி. இந்நிலையில், இடிந்த வீட்டுக்குள் ஓடி ஒளிந்தவரை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறை.

  • யூடியுபர் சவுக்கு சங்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

  • இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம். மேலும், நேரில் சந்திக்க வராத ஆட்சியரிடம் கிராம மக்கள் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜிஎஸ்டி - தேசிய கல்விக் கொள்கை
BOX OFFICE-ஐ அதிரவைத்த ‘The GOAT'... 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா? விஜய் செய்த சம்பவம்!
  • காங்கிரசுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம்ஆத்மி.

  • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை. இந்நிலையில், குற்றவாளிகள் கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்றதாக குற்றச்சாட்டு.

  • வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை அவமதிப்பதை ராகுல் காந்தி வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டு.

  • "ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கவில்லை. இனியும் அவமதிக்கமாட்டார்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி.

  • ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு இந்தியா ஆதரவு. இந்நிலையில், காசா நிலவரம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com