மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி ஏதும் வழங்கவில்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம். மேலும், சுரங்கம் அமைக்கும் திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் உறுதி.
தமிழகத்தில் நொடிக்கு நொடி கொலை என்ற அவல நிலை உருவாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் விமர்சனம்.
தமிழகத்தில் அதிமுகவின் இடத்தை பிடிக்க பாஜக முனைப்பு காட்டுவதாக திருமாவளவன் விமர்சனம். வரும் தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்து பயணிக்கவே பாஜக விரும்பும் என்றும் கருத்து.
நடிகர் ரஜினிகாந்த்துடன் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சந்திப்பு. தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து உரையாடியதாக தகவல்.
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. சிறு குரலாக இருந்த தன்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என பேட்டி.
தஞ்சை அருகே ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி தமிழகமெங்கும் ஆசிரியர்கள் போராட்டம். பணிப் பாதுகாப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்.
தமிழக மருத்துவத்துறையில் ஏ.ஐ தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என தி இந்து மற்றும் எஸ்.ஆர்.எம் குழுமம் இணைந்து நடத்திய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
பிற நாட்டு பகுதிகளை சொந்தம் கொண்டாடும் பழக்கம் இந்தியாவிடம் இல்லை என சீனாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி கயானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.
அதானி மீதான முறைகேடு புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்புள்ளது என்றும், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்.
அதானி மீது அமெரிக்காவில் சுமத்தப்பட்டுள்ள லஞ்ச குற்றச்சாட்டில் தாங்கள் ஆளாத மாநிலங்கள் பெயர்தான் இடம் பெற்றுள்ளது என பாஜக விளக்கம். பிரதமர் மோடியின் நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு.
அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதானி நிறுவனத்துடன் எந்த வணிக தொடர்பும் இல்லை என விளக்கம்.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதானி நிறுவனத்துடனான விமான நிலைய மற்றும் மின் விநியோக ஒப்பந்தங்களை ரத்து செய்தது கென்யா.
வனப்பரப்பு சுருங்குவது குறித்து மாநில அரசுகளிடம் விரிவான அறிக்கையை கோரியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். கடந்த கால் நூற்றாண்டுகளில் 23 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் அழிந்துள்ள தகவல் அடிப்படையில் நடவடிக்கை.
மாமல்லபுரம் வடநெம்மேலியில் தொடங்கியது சர்வதேச பீச் வாலிபால் போட்டிகள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.
உக்ரைனின் ராணுவ நிலைகளை புது ரக ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக ரஷ்ய அதிபர் புடின் தகவல். மேலும், எங்களை தாக்கும் ஆயுதத்தை யார் தந்தார்களோ அவர்களுக்கும் பதிலடி உண்டு என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை.
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெர்த்தில் இன்று தொடக்கம். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்தியா முனைப்பு.