தலைப்புச் செய்திகள்: ராமேஷ்வரத்தில் பெய்த அதீத மழை முதல் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ராமேஷ்வரத்தில் பெய்த அதீத மழை முதல் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • ராமேஸ்வரத்தில் மேகவெடிப்பு காரணமாக குறுகிய நேரத்தில் 10 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த 41 சென்டி மீட்டர் அதீத மழையால் வெள்ளக்காடானது பாம்பன்.

  • நாகையில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சேதம். நெல் மணிகள் உதிர்ந்து முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை.

  • திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்களை மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை.

  • தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கனமழை
கனமழைட்விட்டர்
  • தஞ்சையில் கொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு நிதியுதவி, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். இந்நிலையில், கைதானவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கையும் தமிழக அரசு காக்கவேண்டும் என வலியுறுத்தல்.

  • சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிக்கை.

காலை தலைப்புச் செய்திகள்
தஞ்சை ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை.. மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு!
  • நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, மதுரை சின்ன உடைப்பு பகுதி மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால், 8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

  • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் விடுவித்தது தமிழக அரசு. பயனாளிகளுக்கான நிதி கிடைக்காதது குறித்து புதிய தலைமுறையில் கள ஆய்வுச் செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை.

கலைஞரின் கனவு இல்லம்
கலைஞரின் கனவு இல்லம்
  • தெலுங்கு பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படாததால் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

  • சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18வரை நடைபெறும் என அறிவிப்பு. மேலும், சிபிஎஸ்ஐ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை.

காலை தலைப்புச் செய்திகள்
“எடப்பாடி பழனிசாமியா அல்லது எரிச்சல் சாமியா?”- இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மா.சு எதிர்வினை!
  • கயானா சென்ற பிரதமர் மோடி கரீபிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை. வணிகம், தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட 7 துறைகளில் உறவுகளை வலுப்படுத்த அழைப்பு.

  • இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு. மின்வினியோக ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தர முனைந்ததை மறைத்து முதலீடு திரட்டியதாக புகார்.

  • மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு. ஜார்க்கண்டில் 2ஆம் கட்ட தேர்தலில் 66% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்.

காலை தலைப்புச் செய்திகள்
மகாராஷ்டிரா | ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
  • மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல். ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க கடும் இழுபறி எனக்கூறி உள்ளன கணிப்புகள்.

காலை தலைப்புச் செய்திகள்
ஜார்க்கண்ட்: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
  • பருவநிலை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளின் அரசுகளிடம் 90 ஆயிரம் கோடி டாலர்கள் கோரும் வளரும் நாடுகள். கரியமில வாயு வெளியீட்டை குறைப்பதுடன் புதிய நடைமுறைகளை கடைபிடிப்பதற்காக நடவடிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com