காலை தலைப்புச் செய்திகள் | The GOAT ரிலீஸ் முதல் அமெரிக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, GOAT ரிலீஸ் முதல் அமெரிக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • விஜய் நடித்துள்ள GOAT திரைப்படத்தை காண திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்... தமிழகத்தில் காலை 9 மணிக்கு ரிலீசாகும் நிலையில் ரசிகர்கள் உற்சாகம்.

  • பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், 24 பதக்கங்களுடன் பட்டியலில் 13 இடத்துக்கு முன்னேறியது இந்தியா.

  • பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தாயகம் திரும்பியநிலையில், சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

  • “எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம்?” என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கேள்வி. இதற்கு, “சென்னைக்கு வாருங்கள்... விருந்து சாப்பிடலாம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

  • சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

  • சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. மேலும், இரு நாட்டு உறவு குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்தினத்துடன் இன்று பேச்சுவார்த்தை.

  • சென்னையில் ஆலோசனை நடத்தியது தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி. இந்நிலையில், பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க கோரிய அறிவிப்பு ரத்து. இந்நிலையில், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

  • விருத்தாசலம் பெட்ரோல் பங்க்கில் 400 ரூபாய்க்கு வெறும் 300 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பப்பட்டதாக வாகன ஓட்டி புகார் எழுந்தநிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம். இந்நிலையில், மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மேற்குவங்க ஆளுநர்.

  • அமெரிக்காவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com