தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர, சென்னைக்கு இன்று 2692 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
விருதுநகர் அருகே காட்டாற்றில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, ஆற்றின் மறுகரையில் சிக்கித்தவித்த 150 பேரை கயிறு கட்டி மீ்ட்ட தீயணைப்புத்துறையினர்.
நாகை, திண்டுக்கல், தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை
புதுக்கோட்டை அருகே வயலில் நின்றிருந்த விவசாயி இடி தாக்கி உயிரிழப்பு.
திருச்செந்தூரில் சற்று நேரத்தில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா. இதனைக்காண வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
புதுச்சேரியில் நடைபெற்ற உதயநாள் கொண்டாட்டங்கள் பாரம்பரிய நடனங்களை கண்டு களித்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி.
மயிலாடுதுறையில் விமரிசையாக நடைபெற்ற காவிரி துலா உற்சவ அமாவாசை விழாவில், இரு முறை புனித நீராடிய பக்தர்கள்.
இலங்கை அதிபர் அநுரகுமார திஸநாயகவுடன் இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1.87 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 8.9 விழுக்காடு அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல்.
பழிவாங்கும் எண்ணத்தில் அலைகிறார் டொனால்டு ட்ரம்ப் என பரப்புரையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு.
கனமழை, வெள்ளத்தால் ஸ்பெயினில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்வு.