கோவை, திருப்பூரில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த சூழலில், மேட்டுப்பாளையத்தில் வெள்ளத்தில் கார்கள் சிக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இதேபோல சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோயிலை மழைநீர் சூழ்ந்ததும் நிகழ்ந்துள்ளது.
“திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக கூறுவது எடப்பாடி பழனிசாமியின் கனவு. அவர் உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
“உதயநிதியை துணை முதலமைச்சராக்கியதுதான் மு.க. ஸ்டாலினின் சாதனை. மேலும், திமுக கூட்டணி கட்சிகள் எச்சரிக்கை மணியடிக்க தொடங்கிவிட்டது” என எடப்பாடி பழனிசாமி கருத்து.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், ஜெயிலர் அருள்குமரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாவலரை தாக்கிய விவகாரத்தில், கைதான மூவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்.
கவரைபேட்டை ரயில் விபத்துக்கு காரணமான சதியில், ஒரே நாளில் 9 பேரிடம் விசாரணை.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என ஈரான் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.
வயநாடு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்ப்பு.
வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளக்காடான பெங்களூரு நகரம்... வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் கடும் அவதி. ரப்பர் படகு மூலம் அனைவரையும் மீட்ட மீட்புக்குழுவினர்.
கனமழை காரணமாக பெங்களூருவில் கட்டுமான பணி நடந்த கட்டடம் இடிந்து விபந்ததில், இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.
இந்தியா - சிங்கப்பூர் இடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்த ஒப்பந்தத்தில், இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு. பாரதிய ஜனதா 155 தொகுதிகள் வரை போட்டியிட வாய்ப்பு என தகவல்.
உகாண்டாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.