Headlines | பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் சாதனை முதல் ‘பசு காவலர்களால்’ கொலை செய்யப்பட்ட மாணவர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பாராலிம்பிக்ஸில் ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள் வென்ற இந்தியா முதல் பசுவை கடத்தியதாக எண்ணி கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதுவரை இல்லாத அளவாக இம்முறை 20 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

  • பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியா வீரர் ஷரத் குமார். மேலும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கத்தை பெற்றார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” - நடிகர் நிவின்பாலி விளக்கம்!
  • சான்பிரான்சிஸ்கோவை தொடர்ந்து சிகாகோ சென்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிலையில், தமிழ் அமைப்புகள் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

  • பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது புகார். இந்நிலையில், பெண் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பாலியல் புகார் அளித்த பெண் யாரென்றே தெரியாது என நிவின் பாலி பேட்டி அளித்திருக்கிறார். மேலும் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் கூறுவதை நிச்சயம் மதிப்போம் என சென்னையில் கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டி.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் . இந்நிலையில், செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்ட்னை எனவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • தருமபுரியில் உணவக உரிமையாளர் சாப்பிட்ட உணவிற்கு கட்டணத்தை கேட்டபோது ஷூவால் அடிக்க பாய்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர். சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவக உரிமையாளரை அடிக்க பாய்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்
உணவக உரிமையாளரை அடிக்க பாய்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்புதிய தலைமுறை
  • அரசுமுறைப் பயணமாக புருனே நாட்டுக்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார் பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முத்தாதி பில்லா.

  • பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவானது, மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

  • ஹரியானாவில் பசுவை கடத்தியதாக தவறாக எண்ணி 12ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக்கொலை. காரை துரத்திசென்று தாக்குதல் நடத்திய 5 பேர் கைது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!
  • காந்தகார் விமானக்கடத்தல் வெப் சீரிஸில் பயங்கரவாதிகளின் உண்மைப் பெயர் வௌியிடப்படும் என மத்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com