Headlines: சர்ச்சையில் சிக்கிய யூ-ட்யூபர் இர்ஃபான் முதல் புகாரை எதிர்கொள்ளும் சீமான் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சர்ச்சையில் சிக்கிய யூ-ட்யூபர் இர்ஃபான் முதல் தமிழ்தாய் வாழ்த்து குறித்த கருத்தால் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Irfan - Seeman
Irfan - SeemanPT Web
Published on
  • வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்தது. டானா புயலாக மாறி, புரிக்கும் சகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என அறிவிப்பு.

  • தேனி, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேட்டூரில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரேநாளில் 14 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

  • திராவிட இயக்கப் படைப்பாளிகளுக்கு முரசொலி செல்வம் பெயரில் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில், அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து உருக்கம்.

முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  • தீபாவளி பண்டிகைக்காக வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

  • தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியைத் தவிர்க்க அறிவுறுத்தல். மாறாக, திருப்போரூர், அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியே செல்ல அறிவுரை.

Irfan - Seeman
தீபாவளி பண்டிகை | சென்னையில் எங்கிருந்து எல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? - முழு தகவல்
  • சென்னையில் தீபாவளியை ஒட்டி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடு.

  • நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மாற்றப்படும் என சீமான் பேச்சு. இந்நிலையில், தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக திமுக சார்பில் திருச்செங்கோட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் மெரினா கடற்கரையின் லூப் சாலையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடி, நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு.

  • “சிறிய குற்றங்களுக்கு கடைநிலை ஊழியர்கள் தண்டிக்கப்படும்போது உயரதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?” என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி.

  • மனைவி பிரசவத்தின்போது, பிரசவ அறுவை சிகிச்சை அறையில் தானே குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அதை வீடியோவாகவும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் யூட்யூபர் இர்ஃபான். அவர் மீது, மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்த நிலையில், யூ ட்யூபிலிருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.

Irfan - Seeman
குழந்தை தொப்புள் கொடி தொடர்பான வீடியோ: புதிய சர்ச்சையில் இர்ஃபான்.. மருத்துவத்துறை அதிரடி நடவடிக்கை!
  • எல்லையில் படைகளை குறைக்க இந்தியா - சீனா ஒப்புதல். மேலும், மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு.

  • மேற்கு வங்க முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியநிலையில், கொல்கத்தா மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவிப்பு.

  • ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் வகுத்த திட்டம் கசிந்தது. இந்நிலையில், அமெரிக்காவிடம் வழங்கிய ஆவணங்கள் வெளியானது குறித்து ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யாவால் தாக்கப்படும் உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா திட்டவட்டம். மேலும், எந்த அமைப்பாலும் ரஷ்ய அதிபர் புதினின் தாக்குதலை நிறுத்த முடியாது எனவும் கருத்து.

  • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணி அறிவிப்பு. இஷான் கிஷானுக்கு நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com