டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.
ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். மேலும், ரத்தன் டாடாவின் தலைமைத்துவம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே அறிவிப்பு. மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு. இதன்மூலம், மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 880 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு.
நெல்லையில் பெய்த மழையால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கிய தண்ணீர் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.
பழைய குற்றால அருவியில் திடீரென பேரிரைச்சலுடன் பாய்ந்த வெள்ளம். ஐந்தருவி, பிரதான அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்கள் இருவர் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டதாக கைதான நிலையில், இவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கியது ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள். மேலும், கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க அமைப்பு நடத்தும் போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை எனவும் பேட்டி.
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் விடிய விடிய போராட்டம். தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய ஊழியர்கள், கைதாகி பின்னர் விடுவிப்பு.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்காக தயாராகும் ரசிகர்கள்.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. இரண்டுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை நெருங்கும் அதி தீவிர மில்டன் புயல். முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.