சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் உற்பத்தியை பெருக்கும் நோக்கில், எண்ணெய் வித்துகள் சாகுபடியை ஊக்குவிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயில் சிறப்புத் திட்டம்.
அரசியல் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சியை தடுக்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை என 4,892 பக்க குற்றப்பத்திரிகையில் வெளியானது முக்கிய தகவல்கள்.
தமிழக வெற்றிக்கழகத்தின்மாநாட்டுக்கான பந்தல்கால் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு. கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு வழிபாடு.
ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளநிலையில்,தமிழக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் பரவலாக மழை பெய்த நிலையில், ஆம்பூரில் நெடுஞ்சாலையில் பெருமளவு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து விமர்சித்த அமெரிக்க அமைப்பின் குறறச்சாட்டை நிராகரித்தது வெளியுறவுத்துறை. மேலும், அமெரிக்க மனித உரிமை விவகாரங்களில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தல்.
உச்சநீதிமன்ற கேண்டீனில் நவராத்திரி காலத்தில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு தவிர்ப்பு. இதற்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள் என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியை குறிப்பிட்டு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆவேசம்.
தனது மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்து செய்தது குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக, தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா வழக்கு.
டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம். மற்றொரு ஆட்டத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்து 78 பேர் உயிரிழப்பு. சிறிய படகில் 248 பேர் சென்ற நிலையில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
மராத்தி, வங்கம், அசாமி, பாலி, பிராக்ருதம் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.