Headlines | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி முதல் உதயநிதிக்கு 3வது இடம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது முதல் சீனியர் பட்டியலில் உதயநிதிக்கு 3 ஆவது இடம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ரஜினிகாந்த் - உதயநிதி
ரஜினிகாந்த் - உதயநிதிfacebook
Published on
  • நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. அவருக்கு சற்று நேரத்தில் மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்.

  • ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை தேர்தலில் சற்று நேரத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், 40 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல். அப்போது, உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என திட்டவட்டம்.

  • தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி வரிசைப் பட்டியல் வெளியீடு. அதில், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு 3 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார்.

உதயநிதி - துரைமுருகன்
உதயநிதி - துரைமுருகன்
  • சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை. மண்டலவாரியாக பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.

  • பருவமழைக்காலத்தில் ஒரு உயிரிழப்புகூட நேரிடாதவாறு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு வானிலை மேலும், முன்னறிவிப்புகளை TN ALERT செயலி மூலம் அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் - உதயநிதி
புல்டோசர் நடவடிக்கை| தடையை மீறி 47 வீடுகள் இடிப்பு.. அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!
  • சென்னையில் மழைநீர் கால்வாயில் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடல்.

  • வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் தொழிற்சாலை சுமார் 3,700 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி புதிய தலைமுறை
  • வக்ஃப் வாரிய சட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு. அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் கருத்துகேட்பில் பங்கேற்றதாக தமிழக சிறுபான்மையினர் துறை விளக்கம்.

  • திருப்பதி - திருமலையில் உள்ள தேவஸ்தான கிடங்குகள் மற்றும் ஆய்வகத்தில் சிறப்பு விசாரணைக்குழு ஆய்வு. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை.

ரஜினிகாந்த் - உதயநிதி
கர்நாடகா | காதலருடன் இருந்த ஆபாச படத்தை அழிக்க காதலி போட்ட ’விபத்து நாடகம்’.. விசாரணையில் ட்விஸ்ட்!
  • கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் என்றும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதாகவும் ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.

  • பழனி பஞ்சாமிர்தம் குறித்த அவதூறு வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு முன்ஜாமீன். மேலும், உண்மையிலேயே அக்கறை இருந்தால், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் கூட பணியாற்றலாம் என நீதிமன்றம் கருத்து.

  • உறவினரை கொலை செய்த குற்றத்திற்காக கைதான இளைஞர் காவல்துறையிடமிருந்து தப்ப முயன்ற நிலையில், அவருக்கு காலில் எலுப்பு முறிவு ஏற்பட்டது.

ஏடிஎம் கொள்ளைகள்
ஏடிஎம் கொள்ளைகள்முகநூல்
  • நாமக்கல் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள், விசாகப்பட்டினத்தில் ஒருகோடியே 48 லட்சம் கொள்ளையடித்தது அம்பலம். மேலும், கேரளா, ஒடிசா, மேற்குவங்கத்திலும் ஏடிஎம்களை அறுத்து திருட்டு.

  • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும், பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

ரஜினிகாந்த் - உதயநிதி
”கதையை எப்படி சொல்லவேண்டும் என அந்நிலம் எனக்கு சொல்லும்..” - படம் உருவாகும் விதம் பற்றி வெற்றிமாறன்!
  • ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு மற்றவர்களை துறவிகளாக்குவது ஏன்? என 2 மகள்களை மீட்டுத் தரக்கோரி கோவையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • பிரதமர் மோடி மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பலவீனமாகியிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. மேலும், 9 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக வந்தால் அரசு கவிழக்கூடும் என ஆரூடம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
  • விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத மத்திய அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது? என ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி.

  • ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.

  • அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் குவித்து அசத்தல்.வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு.

ரஜினிகாந்த் - உதயநிதி
”45 நாட்கள் தூங்கல”.. நிறுவனம் கொடுத்த டார்ச்சர்.. பணி சுமையால் ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com