நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை ஒதுக்கீடு. கோவி செழியனுக்கு உயர்கல்வியும், சுற்றுலாத்துறை ராஜேந்திரனுக்கும், சிறுபான்மையினர் நலத்துறை நாசருக்கும் வழங்கப்பட்டது. இவர்களோடு, தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
“எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவேன்” என அறிவுரை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி.
“தாயுமானவரான முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி” என அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம். மேலும், “பல நூறு ஆண்டுகள் தவம் செய்தாலும் உன்னதமான அன்பைப் பெற இயலுமா?” என்றும் பதிவு.
சேலம் நகைக்கடை வியாபாரியை கர்நாடகாவில் வழிமறித்து கொள்ளையடித்து, ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 350 கிலோ வெள்ளி கட்டிகளை தூக்கிச் சென்றவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு.
திருப்பூரில் மேலும் 3 வங்கதேச இளைஞர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்ததால் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் மோதல் ஏற்பட்டதில் ஏற்பட்ட தகராறில் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு.
மகாராஷ்டிராவில் 11,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுடி, நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனம்.
ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம். காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் போர்க்களமானது.