தலைப்புச் செய்திகள் | கலைஞர் நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் முதல் சம்பாய் சோரனின் அறிக்கை வரை!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
“வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்காற்றியவர் கருணாநிதி. தேசிய ஆளுமையான கருணாநிதியின் பொதுநலத் தொண்டால் நாட்டிற்கே நன்மை விளைந்துள்ளது” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி. மேலும் ”நாடே போற்றும் தலைவராக கலைஞர் உயர்ந்து நிற்கிறார்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் 188 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, யாரிடம் இருந்தும் குடியுரிமையை சிஏஏ பறிக்காது என்றும் பேச்சு.
தலைமைச் செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக நியமனம். இந்நிலையில், விரைவில் புதிய தலைமைச் செயலாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு.
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ்பால் மாரடைப்பால் மரணம். இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.
மாமல்லபுரம் அருகே 4 நாட்கள் நடைபெற்ற காற்றாடி திருவிழா நிறைவு விழாவில், வானை அலங்கரித்த 300க்கும் மேற்பட்ட ராட்சத காற்றாடிகள்.
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் 38 தங்கும் விடுதிகளை இடித்து அகற்ற உத்தரவு. யானைகள் வழித்தடத்தில் விடுதிகள் கட்டப்பட்டதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கினர் கால்பந்து ரசிகர்கள். போராட்டத்தால் மோகன் பகான் - கிழக்கு பெங்கால் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் கொலை தொடர்பாக சூர்ய குமார் யாதவ் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி உள்ள்து. அதில், ‘உங்கள் மகள்களை பாதுகாத்திடுங்கள்’ என்பதை அடித்து விட்டு ‘உங்கள் மகனுக்கு கற்பியுங்கள்’ என பதிவு செய்துள்ளார்.
ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்தபோது அவமதிக்கப்பட்டதாக சம்பாய் சோரன் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பாஜகவில் அவர் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில், தன்னிடம் அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ், தரம் தாழ்ந்த அரசியலை மட்டுமே டிரம்ப் செய்து வருவதாக குற்றச்சாட்டு.
ரஷ்யாவில் உள்ள பாலத்தை குண்டுவீசி தகர்த்தன உக்ரைன் படைகள். காட்சிகளை பகிர்ந்து உறுதிப்படுத்தினார் ராணுவ தளபதி.